புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013

ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு, 50 பேர் காயம், மீட்புகுழு விரைவு

ஐதராபாத்தில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Photo: இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி
பிப் 21, 2013
    
1

இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் இது ஒரு இனப்படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதன் எதிரொலியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி -சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

21 பிப்., 2013

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் மாவட்ட  கழகங்களுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபெற்ற  அரை இறுதி நுழைவுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவதுநிச்சயமாகிவிட்டது. 
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக் குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கை முறை பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருட கால
மிலன் அணிக்கெதிரான சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி தோல்வியடைந்தது.
உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 58 ஆவது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் நடக்கிறது

நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, பிஜி அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 16-0 என்று வெற்றி பெற்றது.
உலக ஹொக்கி லீக் போட்டியில் இந்திய அணி, பிஜியை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் உலக ஹொக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது.

தமிழகக் கட்சிகளின் கடும் அழுத்தத்தில் சிக்கியிருக்கும் டில்லி


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் பதுங்கு குழிக்குள் தடுத்து வைக்கப்பட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான புகைப் படங்களை பிரிட்டனின் சனல் 4 வெளியிட்டதையடுத்து தமிழக கட்சிகள் ஆளும் ஐக்கிய முற்போக்குக்

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தட களப் போட்டியின் 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான குண்டெறிதலில் வெண்கலப்பதக்கத்தையும்,தட்டெறி தலில் வர்ண விருதினையும் பெற்ற இராஜமனோகர் தர்சிகா வவுனியா மாவட்டத்திற்கும், வடமாகாணத் திற்கும் பெருமை சேர்த்தார்.
அயராத முயற்சியும், நேரம் தவறாத பயிற்சியும், பெற்றோரின் ஊக்குவிப்பும் இருந்தால் எதிலும் எவரும் சாதிக்கலாம். அந்த வகையில் பாடசாலை
அவுஸ்ரேலியாவில் உயரம் பாய்தல் யாழ்.இந்துவீரன் இரண்டாமிடம்.

அவுஸ்ரேலியா அல்பேட் பார்க்கில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ். இந் துக்கல்லூரி வீரன் இரத்தின சிங்கம் செந்தூரன் 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.95 மீற்றரைக் கடந்து இரண்டாமிடத் தைத்தட்டிக்கொண்டார்.

நேற்று மாலை இப்போட்டி நடை பெற்றது. இவர் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் இருந்து சென்ற ஒரே ஒரு வீரர் இவர் ஆவார்.
இவரது இந்த வெற்றிக்குக் கல்லூரி அதிபர், விளையாட் டுத்துறைப் பொறுப்பாசிரியர் சுவாமிநாதன் மற்றும் பயிற்சியாளர் செ.றமணன் ஆகியோர் வழி அமைத்துக் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தளையில் கோயில் கொண்டு எமையாளும் அன்னை முத்துமாரி
 

பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

திருச்சியில் சிங்கள எம்.பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : நாம் தமிழர் 12 பேர் கைது
சிங்கள எம்பி ஆர்.கே.பி. கேமேஜ்,  சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார்.  அப்போது அவர் ஆலய விடுதியில் தங்கியிருந்தார்.

இறுதிபோரில் வெறியாட்டம்: சானல்-4 ன் புதிய வீடியோ ஆதாரம்

பிரபாகரன் மகன் பாலசந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாராத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது.

பாலச்சந்திரனின் படுகொலைப் புகைப்படம், காணொளி குறித்து கருத்துக் கூற முடியாது நாங்கள் அந்த காணொளி மற்றும் புகைப்படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது. எ: பான் கீ மூனின் பேச்சாளர்
இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்

இலங்கை வீரர்கள் பங்கேற்றால் ஆசிய தடகள போட்டியை தமிழகத்தில் நடத்த விடமாட்டேன்: ஜெயலலிதா-துணிச்சலான முடிவு மதிய அரசுக்கே சவாலான நடவடிக்கை 
சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால், தமிழர்களின் மனம் புண்படும் என்பதால் தமிழகத்தில் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், 20வது ஆசிய தடகள போட்டிகளை சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்த சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளிய கோர காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப் படுகொலை நடந்து இருப்பது தெரிய வருகிறது.
இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும்.
இலங்கை வீரர்கள் 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரில் உள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் எழுதப்பட்டது. அதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த பதிலும், தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை.
ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள 20வது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்படாது.
இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக,


எச்சரிக்கை 
அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை வெளியிட்டார். ஆக புலம்பெயர் தமிழர் யாராக இருந்தாலும் வெளிநாடொன்றில் குடியுரிமை பெற்று இருந்தால் அவர்கள் சொத்துக்களை இலங்கையில் வாங்க முடியாது.விரைவில் வெளிநாட்டில் உள்ளோரின் சொத்துக்களை கூட கையக படுத்தும் சட்டமூலம்  வர இருப்பதாக அற்கிறோம் . வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கனி வீடு போன்ற சொத்துகளை வாங்கவோ விற்கவோ வைத்திருக்கவோ முடியாத நிலை உருவாகும் 


பிரித்தானியக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கடந்த 10ம் திகதி கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களால் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட தமிழ் ஆர்வலர் டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், அண்ணாவின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள இடத்தில் தடையை மீறிப் பறந்த விமானங்கள் கட்டாயமாக தரையிறக்கப்பட்டன!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள புளோரிடா மாநிலம் பாம் சிட்டி ரெசார்ட் பகுதியின் மேல், தடையை மீறிப் பறந்த மொத்தம் 3 விமானங்கள், போர் விமானங்களால் சூழப்பட்டு

ad

ad