புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, பிஜி அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 16-0 என்று வெற்றி பெற்றது.
உலக ஹொக்கி லீக் போட்டியில் இந்திய அணி, பிஜியை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் உலக ஹொக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது.

மொத்தம் 4 சுற்றுகள் கொண்ட இத்தொடர், இரண்டு ஆண்டுகள் நடக்கும். ஆடவருக்கான 2வது சுற்றுப் போட்டிகள் டெல்லியில் நடக்கின்றன. இதில் இந்தியா, வங்கதேசம், ஓமன், அயர்லாந்து, சீனா, பிஜி உள்ளிட்ட 6 அணிகள் விளையாடுகின்றன.
நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, பிஜி அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 160 என்று வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் துணை அணித்தலைவர் ரகுநாத்(4வது, 11வது, 41வது நிமிடம்), டேனிஷ் முஜ்தபா(28, 38, 59) ஆகியோர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து “ஹாட்ரிக்” சாதனை படைத்தனர்.
ருபிந்தர் பால் சிங்(5, 35), மலாக் சிங்(51, 63) தலா இரு கோல் அடித்தனர். தவிர, நிதின் திம்மையா(18), குர்ஜிந்தர்(21), கோதாஜித் சிங்(46), மன்பிரீத் சிங்(50), சிங்க்லசேனா சிங்(53), தரம்விர் சிங்(55) தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ருபிந்தர் பால் வென்றார். நாளை நடைபெறவுள்ள 2வது போட்டியில் இந்திய அணி, ஓமனை சந்திக்கிறது.
நேற்று நடந்த மற்ற போட்டிகளில் சீனா 40 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அயர்லாந்து அணி 52 என வங்கதேசத்தை தோற்கடித்தது.
மகளிருக்கான உலக ஹொக்கி 2வது சுற்றுப் போட்டிகள் டெல்லியில் நடக்கின்றன. இதில் இந்தியா, பிஜி, ஜப்பான், கஜகஸ்தான், மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட 6 அணிகள் விளையாடுகின்றன.
நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 80 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஜஸ்பிரீத் கவுர் 4 (8, 21, 54, 70வது), ராணி ராம்பால் 3 (15, 26, 41வது நிமிடம்) கோல் அடித்தனர். கஜகஸ்தான் அணி, ஒரு “சேம் சைடு” கோல் அடித்தது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது.
மகளிர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில், ஜப்பான் அணி 140 என்ற கோல் கணக்கில் பிஜி அணியை வீழ்த்தியது. மலேசிய அணி 31 என்று ரஷ்யாவை தோற்கடித்தது.

ad

ad