புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013

ஐதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு, 50 பேர் காயம், மீட்புகுழு விரைவு

ஐதராபாத்தில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்ததில் 22 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் இன்று மாலை 7 மணியளவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.
அதே நேரத்தில் கோனார்க் தியேட்டர் அருகிலும் குண்டு வெடித்தது. மற்றொரு இடத்திலும் குண்டு வெடித்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த பொலிசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 20 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் ஐதராபாத் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் அறிந்ததும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நகரில் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad