புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


பாலச்சந்திரனின் படுகொலைப் புகைப்படம், காணொளி குறித்து கருத்துக் கூற முடியாது நாங்கள் அந்த காணொளி மற்றும் புகைப்படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது. எ: பான் கீ மூனின் பேச்சாளர்
இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்
கே என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான காணொளி மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி,
நாங்கள் அந்த காணொளி மற்றும் புகைப்படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது. என தெரிவித்துள்ளார்.

ad

ad