புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள இடத்தில் தடையை மீறிப் பறந்த விமானங்கள் கட்டாயமாக தரையிறக்கப்பட்டன!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுமுறையை கழிக்க தங்கியுள்ள புளோரிடா மாநிலம் பாம் சிட்டி ரெசார்ட் பகுதியின் மேல், தடையை மீறிப் பறந்த மொத்தம் 3 விமானங்கள், போர் விமானங்களால் சூழப்பட்டு, கட்டாயமாக தரையிறக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி தங்கியுள்ள பகுதியின் மேல் விமானங்கள் பறக்க தடை உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்த பின், விமான போக்குவரத்து விஷயத்தில் கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி போன்ற வி.வி.ஐ.பி. பிரமுகர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு மேலே வானில் விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.


முதலில் Lancair 320 ரக விமானம் ஒன்று ஒபாமா தங்கியுள்ள ரெசார்ட் வான் பகுதிக்குள் நுழைந்தது. அதை கண்டுபிடித்த விமான படை அதிகாரிகள், உடனடியாக எப்.16 ரக போர் விமானங்கள் இரண்டை அனுப்பினர். குட்டி விமானத்தை வானில் மடக்கிய போர் விமானங்கள், அதை உடனடியாக தரையிறக்கும்படி உத்தரவிட்டனர்.
இது நடந்தபின், Cessna 152 ரக குட்டி விமானம் பறந்துவர, மீண்டும் போர் விமானங்கள் கிளம்பிச் சென்றன. குட்டி விமானம் ஸ்டூவர்ட் பகுதியில் தரையிறங்கியது. அது தரையிறங்கும் வரை போர் விமானங்கள் உடன் சென்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சில மணி நேரம் கழித்து Robinson R44 ஹெலிகாப்டர் ஒன்று, தடை செய்யப்பட்ட வான் பகுதியில் பறந்தது. அதையும் போர் விமானங்கள் மடக்கி கட்டாயமாக தரையிறக்கின.
ராணுவ அதிகாரி லெப். கர்னல் ஹம்ப்ரெய்ஸ், “இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

ad

ad