புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2013

 பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்
news
பிரித்தானிய பிரதமரை சிலர் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். 
 
குறித்த விடயம் தொடர்பில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்ததாவது,
 
என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது.
 
வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடாது சிலரது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 
 
பிரித்தானிய பிரதமர் சரி அல்லது பிழை என எமக்கு குறிப்பிட முடியாது. பிரதமர் கமரூன் ஒரு நாள் மட்டுமே வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார் என்றார்.

சுற்றலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் சமநிலையில் நிறைவு பெற்றது.
தம்புள்ளை ரங்கிரிய விளையாட்டு மைதானத்தில்  நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டி மழை காரணமாக இடைக்கிடையே பாதிப்புக்கு உள்ளானது.
 
இந்த நிலையில், போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 33 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றது.
கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
 
இதன்போது சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு- கல்முனை மாநகரசபையில் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
 
இதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் போன்றவை மேற்கொண்டுள்ளன.
வவுனியாவில் இடம்பெறும் தீப்பந்த போராட்டம் 
வவுனியா பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்த போராட்டம் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மிகவும் எழுச்சியாக நடைபெற்று வருகிறது.
சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே
சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?": தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், , எங்கள் வீடுகளை எம்மிடம் தா,

17 நவ., 2013

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி
ரஷ்யாவில் போயிங் விமானம் நொறுங்கி விழுந்து 44 பேர் உயிரிழந்தனர். கஸôன் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கமரூன் செயற்படுகிறார்: கோத்தபாய குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை விசாரிக்காவிட்டால் ஐநா மன்ற விசாரணை கோருவோம்--கேமரன் BBC

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மார்ச் மாதத்துக்குள் சுயாதீனமான ஒரு விசாரணையை அமைக்காவிட்டால், பிரிட்டன், இது தொடர்பாகhttp://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131116_cameronvideo.shtml ஒரு சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநா மன்றத்திடம் கோரும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் எச்சரித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு முடிவு
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத்துறை
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் உட்பட 83 பேரை விடுதலை செய்யுமாறு கோரியும்

16 நவ., 2013



மொறிசியசுக்கு அழுத்தம் கொடுத்த சர்மா – அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் ராம்கூலம்

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணிக்க மொறிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது. 



            தற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.

சரவணப்பெருமாள்?

           ட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றினாலும் ஜெ.அரசின் முதன்மையான கவனம் மணல் விவகாரத்தின் மீதுதான் இருக்கிறது. உயர்நீதிமன்றத்திற்கு சென்ற மணல் பிரச்சினை  தொடர்பாக தனது ஆட்சிக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை

           ""ஹலோ தலைவரே... …  ஒரு பெண் வக்கீல் சட்டம் சம்பந்தமான பத்திரிகையில் எழுதிய கட்டுரை உச்சநீதிமன்றம் வரை கவனத்திற்குப் போய் இந்தியா வையே கிடுகிடுக்க வச்சிருக்கு.''

            மிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவாகவும் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் தஞ்சை விளாரில் உருவாக்கப்பட்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். அதன் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் அரக்கத்தனமாக இடித்துத் தள்ளியிருக்கிறது ஜெயலலிதா அரசு. 
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும்! மதிமுக மாநாட்டில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற வேண்டும் என ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad