புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013




            தற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.

சரவணப்பெருமாள்?

அவரேதான்... கடந்த ராஜ்யசபா தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர். அப்போது அவர் அக்கட்சியின் மாணவரணி செயலாளரும்கூட. பெயர் அறிவிக்கப்பட்ட ஒருசில நாட்களில், 1989-ல் அவர்மீது போடப்பட்ட பழைய வழக்கு ஒன்று தூசு தட்டப்பட்டு பத்தி ரிகை செய்திகளாக வெளிவந்தன. வெள்ளிக்கட்டிகளைக் கடத்தியது தொடர்பான வழக்கு. அந்த வழக்கு விவரங்களை கட்சி மேலிடத்திடமிருந்து மறைத்து விட்டார் என்று கட்சி வட்டா ரத்திற்குள்ளேயே புகார்கள் அனுப்பப்பட, சரவணப்பெரு மாளுக்குப் பதில் வேறொருவரை அ.தி.மு.க வேட்பாளராக்கினார் ஜெ. அத்துடன், சரவணப்பெரு மாளிடம் இருந்த மாணவரணிச் செயலாளர் பதவியையும் பறித்துவிட்டார்.

அரசியலில், கிடைத்த பதவிகளை இழந்து நிற்பதென்பது வனவாசத்திற்கு இணையானது. சரவணப்பெருமாளும் அவரது தரப்பினரும் அத்தகைய நிலைமைக்கு ஆட்பட்டுள்ள நிலையில்தான், எந்த வழக்கிற்காக அவருக்கு கிடைக்க வேண்டிய ராஜ்யசபா பதவி பறிபோனதோ, மாணவரணிப் பொறுப்பு பறிக்கப்பட்டதோ அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. அவர் மீது போடப் பட்ட சட்டப்பிரிவுகளே செல்லாது எனவும் உத்தரவிட்டுள்ளது. 

இப்படிப்பட்ட ஒரு வழக்கா சரவணப்பெருமாளின் அரசியல் எதிர்காலத்துடன் சரமாரியாக விளையாடியிருக்கிறது என்ற விசா ரணையில் நாம் இறங்கியபோது பழைய விவரங்கள் பல வெளிப்பட் டன. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 1975-76ஆம் ஆண்டில் பி.யு.சி படிக்கும்போதே மாணவர் பேரவைத் தேர்தலில் சரவணப்பெரு மாளுக்கும் கிறிஸ்டி ராஜமன்னார், பொன்.தேவராஜ் ஆகியோருக்கும் பகை. இது அப்படியே புகைந்து கொண்டே இருந்தது. கிறிஸ்டி ராஜமன்னார் அ.தி.மு.க எம்.எல்.ஏவாகிவிட்டார். பொன்.தேவராஜ் கஸ்டம்ஸ் துறையில் கண்காணிப்பாளரானார். சரவணப்பெருமாளோ நாயகன் பட வேலுநாயக்கர் பாணியில் செயல்பட்டு வந்தார். அதனால் மக்கள் செல்வாக்கும் அதிகரித்து வந்தது. ஆனால், பொன்.தேவ ராஜுடனான பகை மட்டும் நீடித்து வந்தது. அதன் விளைவுதான், 1989-ல் போடப்பட்ட வெள்ளிக் கடத்தல் வழக்கு. 


அந்த ஆண்டு செப்டம்பர் 27-ல் முக்காணியில் ஒரு மோதல். ஏரல் காவல்நிலையத்தில் வழக்குபோடப்பட்டு, காவல்துறை விசாரித்ததில், சரவணப்பெருமாள் சம்பந்தப்படவில்லை என்றவுடன் எஃப்.ஐ.ஆரில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கிற்குள் சரவணப்பெருமாள் வரவில்லை என்றதும் அவரது டிரைவரைப் பிடித்து சுங்க அலுவலகத்திற்குக் கொண்டு போய் அடிக்கிறார்கள். இதையறிந்த சரவணப்பெருமாள், சுங்க அலுவலகம் செல்கிறார். அடிதடி ஆகிறது. இதையடுத்து, பொன்.தேவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெடிகுண்டு சட்டத்தின் கீழ் சரவணப்பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தூத்துக்குடி உதவி அமர்வு நீதிமன்றத் தில் வழக்கு  நடந்தது. இதுவும் சரவணப்பெருமாளுக்கு சாதகமாக, மேல்முறையீடாக இந்த வழக்கையும் ஸ்ரீவைகுண்டம் வழக்கையும் பொன்.தேவராஜும் மற்றவர்களும் 2003-ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடுகிறார்கள். அதுதான் சரவணப்பெருமாளின் அரசியல் வாழ்க்கையோடு விளையாடியது.

அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி அளித்த தீர்ப்பில், "குற்றம்சாட்டப் பட்டவர் மீது பிரிவு 135(1), (அ) (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இது சட்டத்திற்கு முரணானது. இதுவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. அத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் மீது போடப்பட்ட ஃபெரா சட்டம் 2000ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டது. பழைய வழக்கு என்றாலும் அவற்றிற்குரிய காலக்கெடு 2002ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. இதுவும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்யத் தக்கதாக உள்ளது' என உத்தரவிட்டிருப்ப துடன், "உரிய சட்டவிதிகளின் அடிப்படையிலேயே இதனை விசாரிக்க வேண்டும்' எனவும் கூறியுள்ளது.

""தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகவே என் கணவர் மீது இப்படிப் பட்ட வழக்கைப் போட்டு அதையே காரணமாக்கி அவருடைய அரசியல் எதிர்காலத்தை சிதைத்திருக்கிறார்கள்'' என்கிறார் சரவணப்பெருமாளின் மனைவி கலா. மேலும் அவர், ""என் கணவர் எம்.ஏ., எம்ஃ.பில், பி.ஹெச்.டி முடித்திருக்கிறார். 1991 முதல் 2001 வரை அக்ரோ சொசைட்டி சேர்மனாக இருந்தவர். பிள்ளைமார் சங்கம், ம.தி.மு.க., அ.தி.மு.க. என பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர். 2001 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு  12 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறார். 

எந்த மந்திரி வீட்டுக்கும் போய் நிற்கமாட்டார். யாரிடமும் காசு வாங்கமாட்டார். தனக்கு வரும் சால்வை, ஸ்வீட் எல்லாவற்றையும் அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுவார். வ.உ.சி ரத்ததான கழகத்தின் மூலம் முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட எத்தனையோ பேருக்கு ரத்தம் கிடைக்கச் செய்து அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். மதுரை ஜி.ஹெச்சில் யாராவது ஒருவருக்கு ரேர் குரூப் ரத்தம் கேட்டு தகவல் வரும். இவரிடம் அந்த குரூப் ரத்தம் கொண்டவரின் முகவரி இருக்கும். எந்த நேரமாக இருந்தாலும் தன் சொந்தக் காசைப்போட்டு தூத்துக்குடி, திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அனுப்பி ரத்தம் கொடுக்க வைப்பார். ஆனால், ரத்ததானம் மூலம் அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பத்திரிகைகளில் எழுதினார்கள். அவரது அரசியல் எதிரிகள் அபாண்டங்களைப் பரப்பி விட்டார்கள். அதற்கு ஆண்டவன் கூலி கொடுப்பான்.  

தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரியாது. இப்ப நான் உங்ககிட்டே பேசுவதுகூட அவருக்குத் தெரியாதுங்க. அவர் சில தொழில் களை செய்தார். இல்லைன்னு சொல்லலை. அதையெல்லாம் கல்யாணத்தோடு நிறுத்திக் கிட்டார். என் மேலே சத்தியமா, என் பிள்ளை கள் மேலே சத்தியமா அதற்கப்புறம் அவர் பொதுவாழ்வு, அரசியல், சமூகப்பணியில் தான் ஈடுபட்டு வந்தார். 25 வருசத்துக்கு மேலே திருந்தி வாழுறவருக்கு தண்டனை தருவது என்ன நியாயம்? இப்ப கோர்ட் மூலமா நியாயம் கிடைச்சிருக்குது. இதுக் குப் பிறகாவது அம்மா நல்லது செய்வாங் கன்னு எதிர்பார்க்கிறோம்'' என்றார் எதிர்பார்ப்பு நிறைந்த சோகக் குரலில்.

அரசியல்வாதிகளுக்கும் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது.


-நமது  நிருபர்


 உஷ்...!

கடல்தாண்டியும் பேர் கொண்டது, மலைக்கோட்டை மாநகர கொதிகலன் ஆலையின் மகிமை. அதில் பெரும் ஒப்பந்தகாரர், மூன்றெழுத்துப் புள்ளி. 500 பேருக்கு மாதவருமானம் மற்றும் வசதிகள் கொடுத்தவர், எவ்வளவோ நல உதவி கள் செய்தவர், வானூர்திப் பறப்புப் பயிற்சி நிலையம் தொடங்க... அதிலிருந்து அவருக்கு சரிவுதான்! 3 வருடங்களுக்கு முன்புவரை, தீபாவளிக்கு பரிசு வாங்க மாவட்ட அதிகாரிகளே  வரிசையில் காத்திருந்த அவர் வீடு, இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. 50ஆயிரம் ரூபாய் வரி பாக்கி என அதிலும் ஒரு தேக்கம்!

ad

ad