புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

மொறிசியசுக்கு அழுத்தம் கொடுத்த சர்மா – அடுத்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பை உதறினார் பிரதமர் ராம்கூலம்

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணிக்க மொறிசியஸ் பிரதமர் எடுத்த முடிவினால், அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளது. 

2015ம் ஆண்டு அடுத்த கொமன்வெல்த் உச்சி மாநாட்டை மொறிசியசில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாநாட்டை நடத்தும் நாட்டின் தலைவர் அதற்கான பொறுப்பை, கொழும்பு மாநாட்டிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையைக் கருத்தில் கொண்டு கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக மொறிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மொறிசியஸ் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, அடுத்த மாநாட்டை நடத்துவதானால், மொறிசியல் நாட்டுத் தலைவர் கொழும்புக்கு வரவேண்டும் என்று கூறியதாக, மொறிசியல் பிரதமர் நவீன் சந்திர ர்ராம்கூலம் சனல்4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இதற்காக அடுத்த மாநாட்டை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ad

ad