புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

 சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர்  வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து
ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை சந்தித்து பேச்சு- வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் நிலையை அறிந்து கொள்ள ஐநா அதிகாரி இலங்கை சென்றுள்ளார்!
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
கொழும்பில் அரைநிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து இன்று கொழும்பில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : முதன் முதலில் ‘நோட்டா‘
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில்  மாலை
நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்
வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா.  இவர் மீது  சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதரன்
நடிகைகள் லிசிபிரியதர்ஷன், ஸ்ரீபிரியா இருவரும் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.  செய்தியாளர்கள் இம்மனு குறித்த விவரம் கேட்டபோது,  அவர்கள் இருவரும் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : பிரசாரம் ஓய்ந்தது நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.   நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் 
கேப்டன் டிவி நிருபர்கள் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் : புகாரை வாங்க போலீஸ் அதிகாரிகள் மறுப்பு
கேப்டன் டிவி நிருபர்கள் லாவன்யா,  சதீஷ்.  இவர்கள் மீது இன்று  சென்னை மதுரவாயலில் அதிமுக பகுதி செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.  தாக்குதலில் பலத்த காயமுயற்ற நிருபர்கள்
என்னை பதவியிலிருந்து நீக்க, நாமல் ராஜபக்ச, வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை!- பி.பீ. ஜெயசுந்தர
நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பணம் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
சொந்த நாடுகளில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக தமது இருப்பை கருதி சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து வருவதாககவும் இதற்கு பதிலாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அந்த நாடுகளின் மதிப்பீடு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம்

பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்திற்காக பதுளை மேல் நீதிமன்றம் தேயிலை தோட்ட கங்காணியான தமிழர் ஒருவருக்கு இன்று மரணத் தண்டனை விதித்துள்ளது.
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த வேலு சிவ சந்திரபோஸ் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா வருமாறு அழைப்பு
நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிந்திய செய்தி 
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. 

சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.

2 டிச., 2013

260 கிலோ கிராம் ஹெரோயின் பிடிப்பட்ட சம்பவத்துடன் பிரதமர் சம்பந்தப்படுவது தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி
இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருள் சம்பவத்துடன், நாட்டின் இரண்டாவது குடிமகனான பிரதமரின் பெயர் சம்பந்தப்படுத்தப்படுவது தொடர்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடையால் இளம்பெண் ஒருவர் மரணம்


கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமானார்
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்த கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி இந்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தடுப்பூசி போடப்பட்டவேளையில் இந்த


இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ் சென்று முதலமைச்சரை சந்திக்கவுள்ளார் 
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் எனவும் அவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் - மன்னார் ஆயர் இராயப்பு சந்திப்பு
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின் போது,

ad

ad