2 டிச., 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் அமைந்துள்ள பிரபாகரனின் இரண்டு வீடுகளை அரசுடமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளன.
அண்மையில் குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பிரபாகரனினால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன.
பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால் இவ்வாறு சொத்துக்கள் அரசுமையாக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது.