புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

ஏற்காடு இடைத்தேர்தல் : பிரசாரம் ஓய்ந்தது நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.   நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் 
மாலை 5 மணியுடன் ஏற்காடு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்தது.


ஏற்காடு தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190. பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர். திருநங்கைகள் 6 பேர். தேர்தலுக்காக 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு மின்னணு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் வீதம் 290 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவின்போது பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்று எந்திரம் பொருத்தும் வகையில் கூடுதலாக 35 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளை(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. 269 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்ப படுகிறது. இணையதள வசதி இல்லாத 21 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசின் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.


மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான மகரபூஷணம் மேற்பார்வையில் தேர்தல் பணியில் 1,402 அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

ad

ad