புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

 சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர்  வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்னா முதலிகேயினால் விடுதலை செய்யப்பட்டார்.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வங்கியில் கடமையில் இருந்த வேளையில் பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட வங்கியின் சிரேஸ்ட முகாமையாளரை, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை நடாத்திய பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிசார், நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த முதல் விசாரணை அறிக்கையில்,
1989ஆம் வங்கிச் சேவையில் இணைந்த சந்தேகநபர் வவுனியா, கொட்டகல, அஸ்கிரிய, தெகிவல ஆகிய இடங்களில் சேவையாற்றியதாகவும் 2002ஆம் ஆண்டு, பலமுறை வன்னிக்கு சென்று எல்.ரி்.ரி.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானை சந்தித்துள்ளதுடன், பொட்டு அம்மானின் வேண்டுகோளையடுத்து புலி உறுப்பினர்களுக்கு பல வங்கிக் கணக்குக்களை கொழும்பில் ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கிக் கணக்குக்களின் ஊடாக வெளிநாட்டிலிருந்து பெரும் தொகையான நிதி புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வங்கியின் சிரேஸ்ட முகாமையாளரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட ரீதியற்றதென உயர் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்ததையடுத்து, மனுதாரரான வங்கியின் முகாமையாளரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில்,
2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தும் பொழுது பொலிசாரினால் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானை சந்கே நபர் சந்தித்துள்ளதுடன், பொட்டு அம்மானின் வேண்டுகோளையடுத்து புலி உறுப்பினர்களுக்கு பல வங்கிக் கணக்குக்களை ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 2009ஆம் ஆண்டிலிருந்து 4 வருடங்களாக இருபது மேலதிக விசாரணை அறிக்கைகள் பொலிசாரினால் இந்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விசாரணை அறிக்கைளில் சந்தேக நபருக்கு புலிகளுடன் தொடர்புள்ளதாக எந்தச் சான்றும் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.
சந்தேக நபரிடமிருந்து பொலிசார் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தில் தனக்கும் புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும் வங்கிக் கணக்குக்களை ஆரம்பித்தவர்கள் வங்கியின் வாடிக்கையாயர்கள் எனவும் அவர்களுக்கு புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை தான் அறிந்திருக்கவில்லையெனவும் தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார் இதனை பொலிசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து பொலிசார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். ஆனால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை. எனவே வழக்குத் தாக்கல் செய்வதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லாத நிலையில் சந்தேக நபரை விடுதலை செய்யவேண்டும் சான்றுகள் இருந்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என சட்டத்தரணி தனது வாதத்தில் குறிப்பிட்டதுடன், சந்தேக நபர் மீது மேற்கொண்ட விசாரணையின் முற்றுமுழுதான விசாரணை அறிக்கைகளை நீதிமன்றில் தாக்கல் செய்ய பொலிசாருக்கு உத்தரவிடும்படியும் கேட்டுக் கொண்டார்.
இருபக்க வாதத்தையுமடுத்து முற்றுமுழுதான விசாரணை அறிக்கைகளை நவம்பர் மாதம் 3ஆம் திகதி தாக்கல் செய்யும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது, பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் சந்தேக நபரான வங்கி முகாமையாளரை விடுதலை செய்யும்படி அறிக்கையொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்ததையடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்கேநபரான வங்கி முகாமையாளரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்

ad

ad