புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2013

விடுதலைப் புலிகளின் பணம் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
சொந்த நாடுகளில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக தமது இருப்பை கருதி சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து வருவதாககவும் இதற்கு பதிலாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அந்த நாடுகளின் மதிப்பீடு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை சில நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் விடுதலைப் புலிகளால் சேகரிக்கப்பட்ட நிதி இலங்கையின் பெயரை கெடுக்க தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் காலக்கெடு முன்னாள் அடிப்பணிய போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவாக கூறியுள்ளார்.
இலங்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை இலங்கையே தீர்மானிக்கும். ஏனைய நாடுகள் அதனை தீர்மானிக்க முடியாது.
அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் இருந்தாலும் அரசாங்கம் தனது பொறுப்பை எந்த விலை கொடுத்தாயினும் மற்றுமொரு நாட்டிடம் விட்டுக்கொடுக்காது.
காலக்கெடுக்களை நாங்கள் ஏற்க முடியாது. சர்வதேச தரங்கள் சகல நாடுகளுக்கும் சமமாக பொருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் மீதும் மட்டும் திணிக்கக் கூடாது என்றார்.

ad

ad