புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம்
சனல்4 காணொளிக்கு எதிராக இலங்கை அரசின் காணொளி
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான காணொளிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள 20 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி ஒன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய
கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

2 பிப்., 2014

மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றதால், தற்போது கை நிறையப் படங்கள் காத்திருக்கின்றன. நயன்தாராவுக்கு
தற்போது சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில்
கடலில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலம்  பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி, ரயில்வே நிர்வாகம் நூற்றாண்டு விழாவை அதே நாளில் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
 ராமேசுவரம் தீவு ஒரு காலத்தி

ரஷியாவில் சோச்சி ஒலிம்பிக்ஸ்: பாதுகாப்புக்கு 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்

ரஷியாவின் சோச்சியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை.   முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது 
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்நாட்டு கிளப் அணியான அட்லெடிகோ மினீரியாவுடனான ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார்.
2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ரொனால்டினோவுடன், கடந்த டிசம்பரில் கிளப் உலகக்
ஜூரிச் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவிடம் தோல்வியடைந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப் 1 பிரிவில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை போதிய வெளிச்சமின்மை காரணமாக சோம்தேவ் - தைபேயின் டி சென் மோதிய 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டம் 6-7, 7-6, 1-6, 6-2, 7-7
திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி சோனியாகாந்தி
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட ஊழல் அரசியல் வாதிகள் பட்டியலில் சனிக்கிழமை இன்று நரேந்திர மோடி மற்றும் சோனியாகாந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது.
இடிந்தகரை அறப்போராட்டம் நீதிக்கான போராட்டம் என்றும், அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும்-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுஉலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற இலட்சோப இலட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்த டோனி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தொடர் தோல்வி: ஆண்டி பிளவர் பதவி விலகல்

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு கிராக்கி

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.7வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 12,13ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ad

ad