புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 பிப்., 2014

மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றதால், தற்போது கை நிறையப் படங்கள் காத்திருக்கின்றன. நயன்தாராவுக்கு
தற்போது சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில்
படமாக்கப்பட்டன. இத்துடன் உதயநிதி ஜோடியாக "இது கதிர்வேலன் காதல்', ஜெயம் ரவியுடன் ஜெயம் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படங்களை முடித்துக் கொடுத்தவுடன் இனி தமிழில் ஒரு வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். திடீரென்று இந்த முடிவுக்கு வரக் காரணம் அவரது கவனம் பாலிவுட்டுக்கு திரும்பி இருப்பதுதானாம். ஹிந்தியில் பிஸியாக இருக்கும்  பிரபுதேவா இயக்கும் படத்திலும் நயன் நடிக்கக்கூடும் என்று பேசப்படுகிறது.
சாத்தான், பூதம் ஆகிய கற்பனைப் பாத்திரங்களின் சாகசங்கள் நிறைந்த படங்கள் சமீபமாக தமிழ் சினிமாக்களில் இல்லை. ஆனால் திகில் படங்கள் வெவ்வேறு கதைக் களங்களுடன் நவீன தொழில்நுட்பங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. "பீட்சா', "தி வில்லா' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன், வசூலையும் ஓரளவு வாரிக் குவித்தது. இந்த வரிசையில் வெளிவரும் படம் "13ஆம் பக்கம் பார்க்க'.  புத்தகத்தில் ஒளிந்திருக்கும் சாத்தான் வெளிவருவதால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. பழமை வாய்ந்த ஒரு புத்தகத்தின் 13ம் பக்கத்தில் சாத்தான் ஒளிந்திருக்கிறது. அந்த சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசங்களே திரைக்கதை. ரத்தன் மவுலி, ராம் கார்த்திக், ஸ்ரீபிரியங்கா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பயங்கர ஆவிகளை ஏவி விடுவது, பேய் ஓட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் வேடத்தில் நளினி நடிப்பதுடன், சுருட்டு பிடிக்கும் மந்திரவாதியாகவும் நடித்துள்ளார். புகழ்மணி இப்படத்தை எழுதி, இயக்குகிறார்.  படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதற்கான கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
கஸ்தூரிராஜா இயக்கும் 23-வது படமாக உருவாகிறது "காசு பணம் துட்டு'. வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மித்ரன், நசீர், பாலா, ஸ்ருதி பட்டேல் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் ஏற்று பிரபு, ராதிகா நடிக்கின்றனர். படம் குறித்து கஸ்தூரிராஜா... ""சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு முகம் இருக்கிறது. வளம் கொழிக்கும் செல்வந்தர்கள் ஒரு பக்கம் என்றால், வறுமையின் பிடியில் நலிவுற்ற வாழ்க்கை வாழும் மனிதர்கள் ஒரு புறம். சென்னையின் இந்த முரண்பாடுகள்தான் இந்த கதை. பிறக்கும் போதே ஒருவனுக்கு இதுதான் வாழ்வு எனத் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு விதத்தில் சமுதாயம் மீதும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கிறது. காசும், போதையும் சில மனிதர்களின் இருப்பிடங்களை மாற்றிப் போட்டு விடுகிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் இருக்கிற வாழ்க்கையை வேண்டாத சகவாசங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையின் முக்கிய சாராம்சங்களை திரைக்கதைக்கு பக்க பலமாக கொண்டு வந்திருக்கிறேன். சென்னை, கேரளம், பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது'' என்றார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு "அஞ்சான்' எனப் பெயர். இந்தப் படத்துக்கான திரைக்கதையை மூன்று முறை மாற்றியுள்ளதாக தெரிவித்தார் இயக்குநர் லிங்குசாமி. ""ஆனந்தம்' படத்தில் அப்பாஸ் நடித்த பாத்திரத்துக்கு முதலில் சூர்யாவைத்தான் தேர்வு செய்தேன். அதே போல் "சண்டக்கோழி' படமும் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் தவறிப் போயின. "அஞ்சான்' சூர்யாவிடம் நான் சொன்ன 4-வது கதை. சமந்தா நடிப்பது உறுதி. மூன்று முறை திரைக்கதை மாறிய போதும், சமந்தா மட்டும் மாறவில்லை. இதைக் குறிப்பிடுவதற்கு காரணம் முதல் கட்ட படப்பிடிப்பின் போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வருவதற்குள் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டதாக வதந்தி கிளம்பியது. ஆனால் சொன்னபடி படப்பிடிப்பில் சமந்தா பங்கேற்றார். கதை முழுவதும் மும்பையில் நடக்கிறது. ஆனால் நிழல் உலக தாதாக்களின் கதை இது அல்ல. நிச்சயம் வித்தியாசமான கதை. படத்தில் பாலிவுட் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். ஹீரோயிஸம் சார்ந்த கதை என்பதால் "அஞ்சான்' என பெயர் வைத்துள்ளேன் என்றார் லிங்குசாமி.
ரசிகர்களின் கவனத்தை தலைப்பு கூடுதலாக இழுக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான படத் தலைப்புகளை இயக்குநர்கள் யோசிக்கின்றனர். இதில் பெரும்பாலும் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. "எனக்கு 20 உனக்கு 18', "3', "திரு 420', "180', "555', "3 பேர் 3 காதல்' என எண்களைக் கொண்டு படங்களுக்குப் பெயரிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இணையும் படம் "கண்ணன் 1 காதலி 2'. படத்தின் தலைப்பு விளக்கம் என்ன? ""கதைகளைச் சித்திரிக்கும் வகையில்தான் படத் தலைப்புகளில் எண்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த முறையில்தான் இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன். கல்லூரி முடித்து ஜாலியாகப் பொழுதைப் போக்கும் ஹீரோ பைரவ் ஒரே நேரத்தில் ஹீரோயின்கள் பார்கவி, மோனிகாவை ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரை காதலிக்கிறார். இறுதியில் இருவரின் காதல் பிடியில் சிக்குகிறார். இந்நிலையில் மற்றொரு காதலி எடுக்கும் முடிவு என்ன என்பதைக் காமெடியாகச் சொல்லும் விதமாக இந்த திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சினிமா எடுப்பதை விட ஒரு படத்துக்கு விளம்பரம் செய்வதில்தான் வித்தியாசமான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை இழுக்கவே இந்த தலைப்பு'' என்கிறார் இயக்குநர் ஏ.கோபால்சாமி.
விஜய், சூர்யா, ஆர்யாவுடன் நடித்த அனுஷ்கா விரைவில் அஜித்துடன் ஜோடியாக நடிக்கிறார். சூர்யாவை இயக்கவிருந்த படம் கைநழுவிப் போனதால், அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கௌதம்வாசுதேவ்
மேனன். இப்படத்துக்கு ஹீரோயின்களை தேடும் வேலை தொடங்கி விட்டது. அனுஷ்காவை ஜோடியாக்க கௌதம் முடிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விட்ட நிலையில், அனுஷ்கா வட்டாரத்தில் விசாரித்தபோது, "" அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்காவை அணுகி பேச்சு நடந்துள்ளது. அவர் இன்னும் கதை கேட்கவில்லை. கௌதம்மேனன் படம் என்பதால் அனுஷ்கா ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இப்போது தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அஜித் படத்துக்கான தேதியை ஒதுக்கி தருவதற்கான முடிவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர். ""அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை.  அநேகமாக வரும் மார்ச் முதல் படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார் கௌதம்வாசுதேவ்மேனன்.