புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ஜூரிச் செஸ் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவிடம் தோல்வியடைந்தார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் சுற்றில் ஆனந்த், ஆர்மீனியாவின் லேவோன் அரோனியிடம் வெற்றியைப் பறிகொடுத்திருந்தார். இந்நிலையில் 2-வது சுற்றில் ஆனந்த் - ஹிகாரு நகமுரா மோதினர்.
"பெர்லின் டிஃபன்ஸ்' முறையில் ஆட்டத்தைத் தொடங்கினார் நகமுரா. சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்ஸென், இந்த முறையைத்தான் அதிகம் தேர்ந்தெடுத்து ஆனந்தை வீழ்த்தினார். அதேபோல கறுப்பு நிறக்காய்களுடன் பெர்லின் டிஃபன்ஸ் முறையில் ஆட்டத்தைத் தொடங்கிய நகமுராவும் ஆனந்தை தோற்கடித்தார்.
கார்ல்ஸென், அரோனியன் மோதிய ஆட்டமும், இத்தாலியின் ஃபேபியானோ, இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்ட் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தன.
இதுவரை நடைபெற்ற சுற்றுகளின் முடிவில் கார்ல்ஸென், அரோனியன், நகமுரா ஆகியோர் 3 புள்ளிகள் பெற்றுள்ளனர். கருணா 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். கெல்ஃபாண்ட் ஒருபுள்ளியைப் பெற்றுள்ளார்.
முன்னணியில் உள்ள ஆறு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தப் போட்டியில் ஆனந்த் இன்னும் தன் புள்ளிக் கணக்கைத் தொடங்கவில்லை.

ad

ad