புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ரஷியாவில் சோச்சி ஒலிம்பிக்ஸ்: பாதுகாப்புக்கு 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்

ரஷியாவின் சோச்சியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விளையாட்டில் கலந்துகொள்ளும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காக, அவர்களுடன் சுமார் 24 பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பப்பட உள்ளதாக புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) தெரிவித்துள்ளது.
யுஎஸ்எஸ் மவுண்ட் வைட்னி என்ற போர்க்கப்பல், இத்தாலியின் கேட்டா பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு கருங்கடலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், யுஎஸ்எஸ் டெய்லர் என்ற போர்க்கப்பல் இத்தாலியின் நேப்பில்ஸ் பகுதியிலிருந்து சனிக்கிழமை புறப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (எஃப்.பி.ஐ) இயக்குநர் ஜேம்ஸ் காமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோச்சி ஒலிம்பிக் போட்டி நெருங்கி வருவதால் ரஷிய அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டுள்ளோம். ரஷிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரிடம் இதுகுறித்து பேசப்பட்டது.
ரஷிய அதிகாரிகள் மிரட்டல்களைச் சந்தித்துள்ளனர். எந்த நேரத்திலும் உதவ தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஜேம்ஸ் கூறினார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் உள்பட அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும், ரஷிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ரஷியாவின் சோச்சி நகரில் இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும் ஒலிம்பிக் போட்டியை
சீர்குலைக்க தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ad

ad