புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்த டோனி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 28 ஓட்டங்களை கடந்த போது, அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை கடந்த 6 ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார்.
இதுவரை 243 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேந்திர சிங் டோனி, 9 சதங்கள், 54 அரைச்சதங்கள் அடங்கலாக 8046 ஓட்டங்களை குவித்துள்ளார்.
போட்டியொன்றின் அதிகபட்சமாக 183 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள அவர் 53.28 எனும் சரசரியை கொண்டுள்ளார்.

ad

ad