2 பிப்., 2014

33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 4-0 என்ற கணக்கில் 33 ஆண்டுக்குப் பின் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
இதுகுறித்து அணித்தலைவர் டோனி கூறுகையில், தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
எங்களைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொண்டு, திறமை வெளிப்படுத்தாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் 1975–76, 1980–81ம் ஆண்டில் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.