புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

துரைமுருகன் இடைநீக்கம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் இன்று முதல்  5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப் படுகிறார் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.  துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் பட்டியல் G S B T 

1.ஜேர்மனி 7 3 2 12
2.ஹோலந்து 5 5 7 17
3.நோர்வே 5 3 6 16
4.சுவிட்சர்லாந்து 5 1 1 7
5.ரஷ்யா 4 7 5 16
6.கனடா 4 6 4 14
7.ஐக்கிய அமேரிக்கா 4 4 8 16
8.போலந்து 4 0 0 4
9.சீனா 3 2 0 5
10..பைலோ ரஷ்யா 3 0 1 4



கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான  30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட்  ஆட்டம் ஒன்றில்  கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
54பேர் இன்று சாட்சியமளிப்பு 
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

எம் வி சன் சீ கப்பலில் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை நிலைமை என்ன – உண்மைக் கதை .

பிரிட்டிஷ் கொலம்பியா மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித கடத்தல் என்று குற்றச்சாட்டப்பட்ட  எம்.வி. சன் சீ கப்பலில் வந்தோரை கனடிய குடிவரவு அதிகாரிகள்
happy-family-day2
குடும்ப தினம் ஒரு தேசிய சட்ட விடுமுறை தினம் அல்ல. ஆனால் டொரோண்டோ பகுதிகளில் பல தொழில்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக மூடப்படும். திங்கட்கிழமை  பிப்ரவரி 17 ஆம் தேதி மூடப்படும் தகவல்கள் இதோ.
மூடப்பட்டிருப்பவை:
  •     தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள்
  •     சிட்டி ஹால் உட்பட மாநகர கட்டிடங்கள்
  •     பொது நூலகங்கள்
  •     வங்கிகள்

கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க சென்ற 33 வயது இளைஞர் மரணம்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.
    வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 52 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 36 பேர், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட 52 பேர்

    "ஈழத் தமிழர் பிரச்னைக்கு கருணாநிதிதான் தீர்வு காணமுடியும்'கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

     ஈழத்தமிழர் பிரச்னைக்கு கருணாநிதியால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்படும்போது அதற்குத் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள்

ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  வருவார்கள் இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று தனது 69–வது பிறந்த நாளை கொண்டாடினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திர மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்களாக செயல் படுகின்றனர்: அரவிந்த் கேஜிரிவால்

பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கேஜிரிவால் புகார் கூறியுள்ளார்.

சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்டம்; புத்தளம் லீக் வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் புத்தளம் உதைபந்தாட்ட லீக் வெற்றிபெற்றுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து

இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
வெல்லிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 246 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. இதன்படி ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணியின் கெளரவத்தை அணித் தலைவர் மெக்கலம் காத்தார்.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.

புலனாய்வு இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்பு

தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை
நேற்று முன்தினம் மாலை 5.50மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
* அத்துருகிரிய வயல்வெளியில் சடலம்;
* கைத்துப்பாக்கி, மனைவி எழுதிய கடிதமும் கண்டெடுப்பு

வடக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதனால் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது

வடக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பிரிந்து நிற்பதனால் எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு

அலுவலகங்கள் அமைக்க தெரிவத்தாட்சி அதிகாரி, oic யின் அனுமதி அவசியம்
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இலங்கையில் புற்றுநோயினால் 14,000 பேர் உயிரிழப்பு

வாய்ப்புற்றுநோய்க்கு 2,500பேர் பலி
* 25,842 பேர் சிகிச்சைக்குப் பதிவு
* வெற்றிலைக் கூறு உண்ணும்போது புற்றுநோய்க்கு துணைபுரியும் 32 வகை இரசாயனம் வாயினுள் விடுவிப்பு
* இலங்கையில் 6 வகை புற்றுநோய் பதிவு

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியின் 40ம் கட்டை பகுதியில் சனியன்று அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதைப் படத்தில் காணலாம்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம்  என்ன ?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
குற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இன்று சடலமாக மீட்பு-தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் 
மேல் மாகாணத்தில் குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ad

ad