17 பிப்., 2014

54பேர் இன்று சாட்சியமளிப்பு 
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.


யுத்த காலத்தின் போதும் அதன்பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கான பதிவுகள் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன்போது ஏற்கனவே வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 4 கிராமசேவகர் பிரிவில் இருந்தும் 67 பேர் சாட்சியப்பதிவுக்கு அழைக்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் இன்று சமூகமளித்திருந்த 54 பேரின் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இன்று விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான யோகியின் மனைவி உட்பட 54 பேர் தமது முழுமையான சாட்சியப்பதிவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்வழங்கினர்.