புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு

அலுவலகங்கள் அமைக்க தெரிவத்தாட்சி அதிகாரி, oic யின் அனுமதி அவசியம்
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதன்படி, தேர்தல் நடை பெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாணங் களில் உத்தியோக பூர்வ ஆவணங்களில்லாது இயங்கும் தேர்தல் அலுவலகங்கள் பொலிஸாரினால் கலைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்குச்சாவடிகள் அமையும் அதிகார எல்லைக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மாகாண சபை சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கமைய தேர்தல் பிரசார அலுவலகங்களை ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைகளும் அமைக்க முடியும்.
இவ்வாறு நிறுவப்படும் தேர்தல் பிரசார அலுவலகங்களில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கையொப்பமிடப்பட்ட ஆவணம் உடன் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத அலுவலகம் உத்தியோகப்பூர்வமற்ற அல்லது அனுமதிக்கப்படாத அலுவலகமாகவே கருதப்படும்.
இவ்வாறான அலுவலகங்களை கலைப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதியுண்டு. இதுபோன்ற அலுவலகங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் இனங்காணப்படுமாயின் அவை அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையத்திற்கூடாக கலைக் கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad