புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 பிப்., 2014


கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான  30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட்  ஆட்டம் ஒன்றில்  கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய கே.சி.சி.சி விளையாட்டுக் கழகம் 30 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 211  ஓட்டங்களைப் பெற்றது.
ஜெயரூபன் 43 ஓட்டங்களையும், சத்தியன் 37 ஓட்டங்களையும், இராகுலன், பிரதீசின் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 11 ஓட்டங்களும் பெறப்பட்டன.
 
யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள்  விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கஜகோபன் 6 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 46 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் திவாகர் 6 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 32 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும், சுஜன் 6 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி முறையே 46 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் யாதவன்,சுதர்சன் ஆகியோர் தலா 6 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி முறையே 34,42 ஓட்டங்களுக்கு  ஓர் இலக்கையும் கைப்பற்றினார்கள்.
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகம் 27 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
சுஜன் 49 ஓட்டங்களையும், சுதர்சன் 44 ஓட்டங்களையும், சதீசன் 21 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 20 ஓட்டங்கள் பெற்றப்பட்டன.
 
கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த சுலோஜன் 5 பந்துப் பரிமாற்றங்கள் பந்து வீசி 21 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும், பவி 4 பந்துப்பரி மாற்றங்கள் பந்து வீசி 22 ஒட்டங்களுக்கு 2 இலக்குகளையும்  சாம்பவன் 4 பந்துப் பரிமாற்றங்கள் பந்து வீசி முறையே 35 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும், ஜனுதாஸ் 6 பந்துப்பரிமாற்றங்கள் பந்து வீசி 45 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.