புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014


நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் :
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால்
தமிழக அரசே விடுதலை செய்யும் :
ஜெயலலிதா அதிரடி 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவது பற்றி மூன்று நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு ரத்து ஆனது.   23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இவர்களுடன் இதே வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.  மத்திய அரசு மூன்று நாட்களில் இதற்கு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்.

சுவிஸ் தமிழ் உதைபந்தாட்டக் கழகத்துக்கு  ஆறு மாத கால தடை 

அண்மையில் சுவிஸ் தமிழ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடமைக்காக லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்(Young Birds .Luzern ) ஆறு மாதங்களுக்கு  தமிழரின் சுற்று போட்டிகளில் பங்குபற்ற தடை  விதித்துள்ளது சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் என அறிவிக்கப் பட்டுள்ளது

பெண்கள் உதைபந்தாட்டத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா சம்பியன்
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி
கிண்ணத்தைச் சுவீகரித்தது சென்.நியூஸ்ரார் இளைஞர் வி.க.

அராலி சில்வெஸ்ரார் இளைஞர் கழகம் இளைஞர் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரில் வெற்றி பெற்றுச் சம்பியனானது சென்.நியூ ஸ்ரார் இளைஞர் கழகம்.
தனியார் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்ட நிலையில் விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு 
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தைச் சேர்ந்த 16வயதுடைய குறித்த மாணவி தினமும்
திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் - செல்வம் எம்.பி 
திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்; வடமாகாண சபையில் தீர்மானம் 
வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 சுவிஸில் தீ விபத்தில் கருகிய, புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தை  பிறப்பிடமாக கொண்ட இளைஞன்,

சுவிஸில் சேமிப்பு இடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சுவிசின் லவுசான் (Swiss Lausanne) மாகாண புறநகர் பகுதி ரெனா (Renens) எனும் இடத்தில் பொருட்களை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்று உள்ளது.

வவுனியாவில் வீடுவீடாக பெண்களுடன் சில்மிசம் செய்யும் அதிகாரிக்கு தர்ம அடி

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்திய வீட்டுத் திட்டங்களை கண்காணித்து வீட்டுத் திட்டத்தை உறுதிப்படுத்தும் இந்திய வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் இளைஞர்

திருச்சியில் காதல் தகராறு: இலங்கை இளைஞனை வெட்டி தீ மூட்டி கொலை

திருச்சி சீனிவாச நகரில் வசிக்கும், ஸ்ரீதரன். இலங்கை தமிழரான இவரது மகன் விதுகரன் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

மீண்டும் இராணுவத்தால் குறி வைக்கப்படும் தமிழ்ப் பெண்கள்

தமிழர் தாயகத்தில் மீண்டும் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பெரும்பாலான கிராம சேவகர்

சிவராத்திரியை முன்னிட்டு இந்துப் பாடசாலைகளுக்கு 28 ஆம் திகதி விடுமுறை

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி சகல இந்து பாடசாலை மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி

செங்கொடி, முத்துக்குமரன் ஆகியோருக்கு வீர வணக்கம்: முருகனின் தாயார் பேட்டி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது செய்தி அறிந்ததும், அதனை வரவேற்று நளினியின் தாயார் நர்ஸ் பத்மா கூறியதாவது:-

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்ததாக அற்புதம் அம்மாள் பேட்டி 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரைமுருகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திமுகவுக்கு ஆதரவாக தேமுதிக குரல்
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் எழுந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீதான உரிமை மீறல் பிரச்சனையில் எடுக்கப்பட்ட நடவடிக்
10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: வேல்முருகன் 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய நீதித்துறை வரலாற்றில், மரண தண்டனை தொடர்பான விஷயத்தில் பெரும் திருப்புமுனையை
முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குதண்டனை ரத்து: தஞ்சையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக
இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் றோயல் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இக்குடும்பத்தினர் பெப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஓமான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டுபாயில் நிதிக் குற்றம் தொடர்பில் இவர்கள் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து
யாழில் ஆவா குழுவுடன் தொடர்பு வைத்திருந்த யுவதி கைது
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய யுவதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad