புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் றோயல் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இக்குடும்பத்தினர் பெப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஓமான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டுபாயில் நிதிக் குற்றம் தொடர்பில் இவர்கள் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து தப்பி ஓடி, ஓமானில் தலைமறைவாக இருந்துள்ளனர்.
றோயல் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டமை இதுவே முதல் சம்பவம் என மஸ்க்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நல ஆலோசகர் எம்.எம் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
40 வயதையுடைய இலங்கையைச் சேர்ந்த நபர், அவரது மனைவி மற்றும் இரண்டு முதல் 10 வயதிற்குட்பட்ட 4 சிறுவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் தனது குடும்பத்தினருடன், கடந்த 2007ம் ஆண்டு கொழும்பிலிருந்து துபாய்க்குச் சென்றுள்ளனர். அதன்பிறகு அந்நபர் புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு 80000 திர்ஹம் கடனாகப் பெற்றுள்ளார்.
ஆனால் அவரது தொழிலில் முன்னேற்றம் அடையவில்லை. பணமில்லாமல் காசோலையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், டுபாயிலிருந்து இலங்கைக்கு திரும்பிச்செல்ல முடியாது என்பதை உணர்ந்த அவர், ஜனவரி முதல் வாரத்திலே மஸ்கட்டிற்குச் செல்ல முடிவு செய்தார்.
தனது குடும்பத்துடன் சேர்ந்து மஸ்கட் உள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகி, நாட்டுக்குத் திரும்ப அவசர பாஸ்போர்ட் செய்து தருமாறு கோரியுள்ளனர்.
தூதரக அதிகாரிகளிடம், தனது பணம் மற்றும்  பாஸ்போர்ட் திருட்டு போயுள்ளன என்று அவர் கூறியதாக தேசப்பிரிய தெரிவித்தார்.

ad

ad