சிவராத்திரியை முன்னிட்டு இந்துப் பாடசாலைகளுக்கு 28 ஆம் திகதி விடுமுறை
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி சகல இந்து பாடசாலை மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி
அமைச்சின் செயலர் அனுர திஸாநாயக்க அறிவித்துள்ளார். 27 ஆம் திகதி மஹா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்று இரவு முழுவதும் நான்கு ஜாமப் பூஜைகளும் நடைபெறும். இவ்விசேட பூஜைகளிலும், விரதங்களிலும் இந்துக்கள் கலந்துகொள்கின்றனர்.
எனவே இந்து பாடசாலை மாணவர்களுக்கு சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் விடுமுறை வழங்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று இந்த விடுமுறையை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக செயலர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
28 ஆம் திகதி வழங்கப்படுகின்ற விடுமுறை தினத்துக்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதி சனிக்கிழமை தினத்தில் இந்துக்களுக்காக பாடசாலையை நடத்துமாறு அவர் சகல அதிபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.