புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி இரண்டு பெண்கள் மற்றும் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை தம்மகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாந்தனை பார்க்க ஆசையா இருக்கு!- சகோதரி, சகோதரன், தாயார்!
இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி,  தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை நடத்த வேண்டும் என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாமானியன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது! - ராஜீவ் படுகொலை கைதியின் வாக்குமூலம்-விகடன் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1970-ம் ஆண்டு பிறந்தேன். அப்பா தமிழக அரசின் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அப்சல் குரு விவகாரத்தில் விமர்சித்த பாஜக, ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன்?: கபில் சிபில்

அப்சல் குரு விவகாரத்தில விமர்சித்த பாஜக ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு : பற்றி எரிகிறது ஆந்திரா
லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா
தி மு க மாநாட்டால் எ தி  மு க கூட்டணியில் மற்றம் கம்யூன்ச்டுகல் கலக்கம் 
லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்
இந்த விடுதலையை ஈழ விடுதலையின்முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்
ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.
ஜெயலலிதா அறிவிப்பு : காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 23 வருடங்களாக சிறையில்  இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்ர், ஜெயக்குமார்,
வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் ஜெயலலிதா : திருமாவளவன்
 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
7 பேரின் விடுதலையை முதலமைச்சர் உடனடியாக அறிவித்ததை வரவேற்கிறோம் :கி.விரமணிராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார்.
7 பேர் விடுதலை: ஜெயலலிதா அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 
இது குறிது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தமிழக அரசு அறிவிப்பு : கலைஞர் மகிழ்ச்சி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு
பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு
ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த சந்திப்பின்போது, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதற்கு முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்
நளினி விடுதலை : சட்டப் பேரவையில் ஜெயலலிதா முழக்கம் 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இந்நிலையில்  நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.    நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.   
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும்,  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து,  வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்துஇனத்தின் மானம் காத்த  முதல்வருக்கு நன்றி : இயக்குநர் சேரன்
 

திரைப்பட இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில்,  ‘’மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது.. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள்... நிறைய அமைப்புகள்

நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் :
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால்
தமிழக அரசே விடுதலை செய்யும் :
ஜெயலலிதா அதிரடி 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவது பற்றி மூன்று நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு ரத்து ஆனது.   23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இவர்களுடன் இதே வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.  மத்திய அரசு மூன்று நாட்களில் இதற்கு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்.

ad

ad