புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014


தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்ததாக அற்புதம் அம்மாள் பேட்டி 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி அறிந்ததும், செவ்வாய்க்கிழமை சென்னை கோயம்பேட்டில் பல்வேறு ஈழப் போராட்டங்களை கண்ட திடலுக்கு பேறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் உறவினர்கள் வந்தனர். அற்புதம் அம்மாளை ஈழ ஆர்வலர்கள் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அற்புதம் அம்மாளுக்கு நடிகர் சத்தியராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், வேல்முருகன் என பலர் இனிப்புகளை வழங்கினர். அற்புதம் அம்மாளும் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை, அற்புதம் அம்மாள் சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது, தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதால் பேரறிவாளன் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரையும் தமிழக அரசு விரைவில் விடுவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

ad

ad