புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

நளினி விடுதலை : சட்டப் பேரவையில் ஜெயலலிதா முழக்கம் 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இந்நிலையில்  நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.    நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.   
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும்,  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து,  வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad