புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

7 பேரின் விடுதலையை முதலமைச்சர் உடனடியாக அறிவித்ததை வரவேற்கிறோம் :கி.விரமணிராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 


இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ‘’ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று வரலாற்றுச் சிறப்பான தீர்ப்பினை வழங்கியது.
இத்தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்வேறு கட்சித் தலைவர்களும் நாமும் தீர்ப்பினை வரவேற்ற தோடு, அத்தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கிணங்க, கடந்த 23 ஆண்டுக் காலமாக சிறையில் வாடும் அம்மூவரையும் தனக்குள்ள சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டோம்.
அந்த மூவரோடு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுச் சிறையில் வாடும் மற்ற நால்வர்களான நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட விடுதலை செய்யப்படுவதாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழக முதல் அமைச்சர் இன்று உடனடியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
மற்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் உண்டு என்றாலும், சிறையில் 23 ஆண்டு காலம் வாடியவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு முழு வடிவம் கொடுத்து, உடனடியாக முடிவெடுத்து, முதல் அமைச்சர் செயல்படுத்தியது பாராட்டத்தக்கதாகும்’’என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ad

ad