புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

ஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர் 
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்

தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.
தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு

''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.

தமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி !
லண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை , என சுமார்

12 ஏப்., 2014

படையினரால் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அனுராதபுரவில் சிறிலங்கா அரசால் அடக்கம்

நெடுங்கேணிக்குத் தெற்கே வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரதும் சடலங்கள் இன்று அனுராதபுர மயானத்தில்
பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். 
நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி 


நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.

போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.














நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்- ரஜினிகாந்துடன் சந்திப்பு

நரேந்திர மோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு நாளை சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக் கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு
சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பேர்ன்- பீல் மாநில கலந்துரையாடல் ஞாயிறன்று நடைபெறுகிறது 

நாளை 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று (15.00) மணியளவில் பேர்ன்மாநில பீல் எனுமிடத்தில் சீலாண்ட் (seeland) வாழ் புங்குடுதீவு மக்களுடனான ஓர் கலந்துரையாடலையும்,

நாளை தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்
ஜெயலலிதா–கரூர், பெரம்பலூர்.
கலைஞர்–விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர், மதுரை.
மு.க.ஸ்டாலின்–கடலூர்.
மொழி சண்டையை இழுத்து விட்டு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள் : நடிகர் வடிவேல் 
நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட

அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்: அன்னா ஹசாரே
டெல்லியில் நான் முதல்-மந்திரியாக பதவியை ராஜினமா செய்தது எனது தவறுதான் என்றும், முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறியது எனக்கு நேரம் சரியில்லாததால் இதுபோன்றவை

படகு மூழ்கியது: 22 பேரை காணவில்லை
இந்தோனேஷியாவில் உள்ள  பாபுவா மாகாணத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாபுவா மாகாணத்தில் மரப்படகு ஒன்றில் 30 பேர் பயணம் செய்தனர். அப்போது படகு மீது ராட்சத
கருப்பு பெட்டியை தேடும் வேட்டையில் 8 நாடுகள் தீவிரம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
டோனியின் வாக்குமூலத்தை பி.சி.சி.ஐக்கு வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!
கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான
புத்தாண்டில் வடமேல் மாகாணத்தில்  புதிய சொகுசுப் பேருந்து 
 பொது நலவாய மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது கோடி ரூபா பெறுமதிமிக்க ஆறு சொகுசு பஸ்கள் வடமேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை
வெடி பொருட்களுடன் கைதானவர்களுக்கு நீதி மன்றில் பிணை 
மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் 52 டைனமைட் வெடி பொருட்களுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த
விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார் 
முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்  விஜயகாந் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இன்றைய கட்சி அறிமுக விழாவில் கருத்து
காணாமல் போன மலேசிய விமானத்தின் துணை விமானி புறப்பட்ட 1 மணித்தியாலத்தில் அவசர அழைப்பு 
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும், அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம்

கோபி உள்ளிட்ட மூவரின் கொலை குறித்து ஐ.நா கேள்வி 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றையதினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய

ad

ad