புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014


தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.
தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து முறையாக கூட்டணி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நாளை தமிழகம் வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாலை 6 மணிக்கு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

மீண்டும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மோடி தமிழகம் வருகிறார். ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளோம்.

மேலும், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் 18ஆம் தேதியும், முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி 16ஆம் தேதி தமிழகம் வருகிறார். மூத்த தலைவர் வெங்கையா நாயுடு வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் வேலூர், கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார். கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி 20ஆம் தேதி வேலூரில் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 21ஆம்  தேதி வரை தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

சென்னைக்கு நாளை நரேந்திர மோடி வரும் போது நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். ( கொற்கை நாவலுக்காக ) சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோடி குரூஸ் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்" என்றார்.

இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த்- மோடி சந்திப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad