புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014


தமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி !
லண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை , என சுமார்
8 இனங்களை இணைத்து இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகில் பாதிக்கப்பட்ட மற்றும் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கும் 8 இன மக்களை உள்வாங்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இது குறித்த செய்தி ஏற்கனவே மீடியாக்களில் வெளியாகியுள்ளது. சீக்கிய இனத்தவர்கள், நோத்-போடிய இனத்தவர்கள், குருதிஸ்தான், அராபியர்கள், தமிழர்கள், சிம்பாபே நாட்டவர்கள் என பல இனமக்கள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். வரும் மே மாதம் 22ம் திகதி, லண்டனில் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் இக் கட்சியை சேர்ந்த 8 பிரதிநிதிகள் போட்டியிட உள்ளார்கள். வரும் 22ம் திகதி நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தமிழர் ஒருவரும் இக்கட்சி சார்பாக களமிறங்கவுள்ளார். தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க தாம் ஐரோப்பிய பாராளுமன்றம் வரை சென்று பேசுவோம் என இக்கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை தெரிவித்துள்ளார்கள். என்.எல்.பி கட்சியின் , ஊடகவியலாளர் கூட்டம் தமிழில் நடத்தப்பட்டுள்ளது. இக் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் அனைத்து உறுப்பினர்களும் பேசும்போது, தமது இனமும் தமிழர்களைப் போல பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து தமிழர்களுக்கு நிச்சயம் உதவுவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்கள். எனவே வரவுள்ள மே மாத தேர்தலில் தமது கட்சிக்கே தமிழர்கள் வாக்குகளைப் போடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்னதாக பல ஆர்பாட்டங்களை தமிழர்கள் நடத்தியுள்ளார்கள். ஆனால் இதுவரை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் தமது பிரதிநிதியாக யாரையும் தேர்ந்து எடுத்து அனுப்பவில்லை. எனவே இம்முறையாவது இதனை தமிழர்கள் நிச்சயம் செய்யவேண்டும் என, என்.எல்.பி கட்சி சார்பாக போட்டியிடும் யோகலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad