புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

காணாமல் போன மலேசிய விமானத்தின் துணை விமானி புறப்பட்ட 1 மணித்தியாலத்தில் அவசர அழைப்பு 
மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும், அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து மலேசிய நாளிதழ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
 
விமானம் ராடார் பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக ‘சோனார்’ நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளிகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு அடியிலிருந்து பதிவான சிக்னல்கள் மலேசிய விமானத்துடையது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் தற்போது சிக்னல் பதிவு ஏதும் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad