புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

கருப்பு பெட்டியை தேடும் வேட்டையில் 8 நாடுகள் தீவிரம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.
   இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.


இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
 விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர்  அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி இன்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றன.
விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர்  அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி நேற்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடு கின்றன.

 இந்த நிலையில்  கடந்த சனிக்கிழமை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் சீனாவின் ஹைசூன் 01 கப்பல்  காணாமல் போன மலேசிய விமானத்தின்  கறுப்பு பெட்டியின் சிக்னலை கண்டறிந்து உள்ளது. வினாடிக்கு 37.5 கிலோகெட்ஸ் அதிர்வெண் கருப்பு பெட்டியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த் சிக்னல் கடலின்  19 ஆயிரம் அடியில் இருந்து வருவதாக கணக்கிட்டு இருந்தது.
இதுபோல் சீன கப்பல் கண்டறிந்த சிக்னலில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில்  ஆஸ்திரேலிய கப்பலான ஓஷன் ஷீல்டுக்கு சிக்னல் ஒன்று கிடைத்து உள்ளது இது குறித்து அக்கப்பல் ஆய்வு செய்து வருகிறது.
ராணுவ விமானங்களும், பொது விமானங்களும், கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன.இதுவரை கடலுக்கு அடையுஇல் இருந்து 5க்கும் மேற்பட்ட சிக்னல்கள் கிடைத்து உள்ளன. இவை மலேசிய விமானத் தின் கருப்பு பெட்டியில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.
விமானத்தின் கருப்பு பெட்டி இந்திய பெருங்கடலின் 15 ஆயிரம் அடி ஆழத்தி இருக்கலாம் என கூறப் படுகிறது.   கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் 8 நாடுளின் 17 கப்பல்கள், 19 விமானங்கள்,  ஈடுபட்டு வருகின்றன. 5 வது சிக்னல்  வெடமேற்கு பெர்த்தின் 1500 மைல் தொலைவில் கிடைத்து உள்ளது .  ஆஸ்திரேலிய விமானப்படை விமானமான ஓரியன் பி-3 க்கு  கிடைத்து உள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அபோட்  சிக்னல் காணாமல் போன மலேசிய விமாத்தின் கருப்பு பெட்டியில் இருந்து தான் வருகிறது என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.   இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று (மோஸ்கோவிஸ்கி கோம்ஸோமோலெட்ஸ்)  மாயமான மலேசிய விமானம் தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கட்த்தபட்டு உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது.
ரஷ்யாவின் உளவு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளதாக  அந்த பத்திரிகை கூறி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-  மலேசிய விமானம் 239 பயணிகளுடன் கடத்தப்பட்டு உள்ளது. இதற்கு விமானிகள் குற்றவாளிகள் இல்லை.விமானம் யார் என தெரியாத தீவிரவாதியால் கடத்தபட்டு உள்ளது. விமானம் பாகிஸ்தான் எல்லையில் கந்தகாரில் தான் உள்ளது.
விமானம் மலைத்தொடர் சூழ்ந்த சாலையில் உள்ளது. தீவிரவாதி விமானத்தின் இறக்கையை முறித்து உள்ளான். விமானத்தை தீவிரவாதி மிகுந்த சிரமத்துக்கு இடையில் இறக்கி உள்ளான்.அனைத்து பயணிகளும் உயிருடன் உள்ளனர். அவர்களது உயிர் உயிர் உனவு இல்லாம ஊசலாடி வருகிறது. 20 க்கும் மேற்பட்ட ஆசிய நிபுணர்கள் பிடித்து வைக்கபட்டு உள்ளனர்.இவர்களில் ஒருவர் ஜப்பானை சேர்ந்தவர். அனைத்து நிபுணர்களும் பாகிஸ்தானின் பதுங்கு குழியில் வைக்கபட்டு உள்ளனர். தீவிரவாதிகளுக்கு  அமெரிக்கா அல்லது சீனாவுடன் பேரம் பேசும் நோக்கம் இருக்கலாம்.
பயணிகள் அனைவரும் 7 பிரிவாக பிரிக்கபட்டு மண் குடிசைகளில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.அவர்கள் உணவு கிடைக்காமல் சிரமபட்டு வருகிண்ரனர். என டெய்லி ஸ்டார் குறிப்பிட்டு உள்ளது
இது வரை இத்தகவல் உலக மீடியாக்களில் இடம் பெற வில்லை. இத்தகவலை மோஸ்கோவிஸ்கி கோம்ஸோமோலெட்ஸ்   ரஷ்ய செய்தித்தாள்  நிருபருக்கு ஒரு உளவுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கபட்டு உள்ளது.

ad

ad