புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

ஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர் 
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்
விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐ.நா. பேச்சாளர் எரிகனேகோ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா. பொதுச் செயலருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ கையெழுத்திட்ட கூட்டறிக்கையை இலங்கை அரசு மதித்து நடக்க வேண்டிய கட்டுப்பாடு இன்னமும் உள்ளது.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தி இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 
 
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டியது முக்கியம் என்று ஐ.நா பொதுச்செயலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 
 
பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும், நிலையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் கொண்டுள்ள உறுதியை ஐ.நா. பொதுச்செயலர் வரவேற்கிறார். 
 
இலங்கை மேற்கொள்ளும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஐ.நா. தொடர்ந்து இலங்கையுடன் பேச்சுக்களை நடத்தும் என்றார்.  

ad

ad