புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

புத்தாண்டில் வடமேல் மாகாணத்தில்  புதிய சொகுசுப் பேருந்து 
 பொது நலவாய மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது கோடி ரூபா பெறுமதிமிக்க ஆறு சொகுசு பஸ்கள் வடமேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை
முன்னிட்டு தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் சேவையில் ஈடுபடுவதற்காக வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து உத்தியோகபூர்வமாக குருநாகல் பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைத்தார்.
 
குறித்த ஆறு பஸ்களில் குருநாகல் தெற்கு டிப்போவுக்கு ஒன்றும் குருநாகல் வடக்கு டிப்போவுக்கு ஒன்றும், குளியாப்பிட்டிய டிப்போவுக்கும் இரண்டும், சிலாபம் டிப்போவுக்கும் இரண்டுமாக  பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. 
 
இன்று குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இரண்டு பஸ்களும் குருநாகல் - கண்டி 602 இலக்க பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
f

ad

ad