புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்கிறார்கள்!-அகதிகள் கண்ணீர் பேட்டி - 5 பேரும் புழல் சிறையில் அடைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாக கருதி தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களை தகர்க்க பாகிஸ்தானுடன், இலங்கை அதிகாரிகள் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனிடம் மத்திய பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வல்வெட்டிதுறை  நகரசபை தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 
 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவருக்கு எதிராக ஆளும் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லலித்மோடி தலைவராக தேர்வு: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.
ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு லலித்மோடி போட்டியிடக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லலித்மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.

யேமன் நாடில் தீவிரவாதிகள் 24பேர் பலி 
ஏமனில் அல்–கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்து உள்ளனர். அவர்களது முகாம்களை அழிக்க ஏமன் ராணுவத்துக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

படகுகள் மூழ்கி கிரீஸ் கடலில அகதிகள் 24 பேர் மரணம் 
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து  2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின.
இதனால் இந்த படகில்   பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்

  
சென்னை அணி  8 விக்கேடுக்களால் வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.  டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து டெல்லி அணி வீரர்கள் ஆட தொடங்கினர்.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (24), விஜய் (35)

வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க இணையதளத்தில் வசதி: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டிவாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

5 மே, 2014


8 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 1,700 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய அவர், 2 ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை

கொலையாளியை பார்வையிட முண்டியடித்த மக்கள்:பொலிஸ் நிலையத்தில் பதற்றம் 
 அச்சுவேலி கதிரிப்பாயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முக் கொலையின் சூத்திரதாரியை பார்வையிட  அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சுன்னாகம் வயல் கிணற்றில் இருந்து சடலம் 
 சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம்  இன்று மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல் 
 முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற  நீதிபதி யோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்க மறியல் 
  முக்கொலையின் சந்தேக நபருக்கு எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற  நீதிபதி யோய் மகிழ் மகாதேவா

ஜாகீர் உசேனை சென்னை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்


ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஜாகீர் உசேனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கியூ பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் போலீசார் விசாரணை
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குழந்தைகள் உட்பட 10 பேரை இன்று காலை தனுஷ்கோடி


16 தமிழ் அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது மத்திய அரசு தடை என தகவல்! கலைஞர் கண்டனம்!
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறித்ததாக" கூறுவார்களே, அது போல இலங்கை ராஜபக்ஷே அரசு தமிழர்கள் என்றால் ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்களோ; தெரியவில்லை! 
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில்

28 ஏப்., 2014

உணவு வழங்கியதில் முறைகேடு விசாரிக்க மூவர் குழு நியமனம்; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
ஐ.நா தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுக்கக் கூடாது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று

ad

ad