புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2014


8 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் அமேதி உள்பட 64 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 7 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 15 தொகுதிகளுக்கும், பீகாரில் உள்ள 7 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள 2 தொகுதிகளுக்கும், உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் என மொத்தம் 64 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (7ஆம் தேதி) 8ஆம் கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடப்பதையடுத்து, இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

முன்னதாக, நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இரானியும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஸ்வாசும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இன்று அமேதியில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். கடந்த மூன்று தினங்களாக காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவருக்கு ஆதரவாக அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும், பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஸ்வாசுக்கு ஆதரவாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தலிலின் இறுதிக் கட்ட தேர்தல் வரும் 12ஆம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் நடக்கிறது. வரும் 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ad

ad