புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


லலித்மோடி தலைவராக தேர்வு: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.
ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு லலித்மோடி போட்டியிடக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட லலித்மோடிக்கு ஆதரவு தெரிவித்ததால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த அறிவிப்பிற்கு எதிராக லலித்மோடி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் லலித்மோடி ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிலாம் என்று தெரிவித்தது. கடந்த 19.12.2013ல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடந்தது. இதில் லலித் மோடி உச்சநீதிமன்ற அனுமதியுடன் போட்டியிட்டார்.

போட்டியிட்ட லலித்மோடி வெற்றி பெற்ற லலித்மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ. சஸ்பெண்ட் செய்துள்ளது.
பி.சி.சி.ஐ.யின் செயலாளர் சஞ்சய் படேல் தனியார் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பி.சி.சி.ஐ. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்கிறது என்று கூறியுள்ளார். தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட்டை நடத்த ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ad

ad