புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014

news
 முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற் 
news
 யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில்  காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர்  பிரணவநாதன் இன்று  தெரிவித்தார்.
 
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி

ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!


னாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.



களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார்.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார்.

யாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவு: சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்
யாழ்.காரைநகர் ஊரியான் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயினால் 11வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்

153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!- ஐ.நா அதிருப்தி

அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு

யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்
யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
பல மக்களை கொன்று குவித்த “போகோ ஹரம்” அமைப்பின் தளபதி கைது

போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தளபதியை நைஜீரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி,

30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரச
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300

16 ஜூலை, 2014

பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி 
news
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா 
இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரில் பின்பற்றிய நிலை இப்போது தேவையில்லை ; கூறுகிறார் முதலமைச்சர் சி.வி 
news
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாசாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை 
news
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ; நாளை வர்த்தமானி அறிவிப்பு 
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகுமெனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 

வேட்டிக்குத் தடைவிதிக்கும் விதிமுறையை நீக்க சட்டத்திருத்தம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேசிய ஜெயலலிதா, 

தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும்

நல்லிணக்கமே இலங்கையின் முக்கியமான பிரச்சினை: பிரான்ஸ் தூதுவர்
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்க என்பதே இலங்கையின் மிக முக்கியமான பிரச்சினை என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் போல் மஞ்சாவூ தெரிவித்துள்ளார்.

சூறையாடல்களுக்குள் அகப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாக்க வடக்கு மக்கள் முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்


சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தேசிய அபிவிருத்திக்காக

இந்தியா தனது வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியது  
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, இந்தியாவின் புதிய அரசாங்கம் 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ad

ad