புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014


யாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவு: சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்
யாழ்.காரைநகர் ஊரியான் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயினால் 11வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி ஊரியான் கிராமத்தில் 11வயதுச் சிறுமி பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடற்படை முகாம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த முகாமில் கடமையிலிருக்கும் கடற்படைச் சிப்பாய், குறித்த சிறுமியை கடந்த ஒரு வாரகாலமாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமி, தனது பெற்றோருக்கு தெரிவிக்காத நிலையில் இன்றைய தினம் சிறுமிக்கு கடுமை யான இரத்தப்போக்கு உண்டானதுடன், தான் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை அறியாத சிறுமி விடயத்தை பெற்றோருக்கு கூறியிருக்கின்றார்.
இதனையடுத்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளதுடன், சிறுமியை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடுகளில் சென்று சந்தித்த கடற்படையினர் இந்த விடயத்தை வெளியிட வேண்டாம் என கடுமையாக அச்சுறுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடியுள்ளதுடன், இந்த விடயத்தை சர்வதேச மட்டத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

ad

ad