புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014


30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரச
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சமூக வலையமைப்புகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரசபை இந்த குற்றங்கள் தொடர்பில் 7 பேரை கைது செய்துள்ளதாகவும் அனோமா குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 2500 பேர் வரை பாலியல் தொடர்பான இணையங்களுடன் தமது கணக்குகளை வைத்திருப்பதாகவும் அனோமா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இணைய குற்றவாளிகள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ad

ad