புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


பாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல

வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்
அமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்

பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்
நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்று காலை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினையைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு சபாநாயகர் நேற்று மாலை பதிலளித்தார்.
மேற்படி பாராளுமன்றத் தெரிவுக் குழு வேறு எந்த வெளிச்சக்திகளுக்கும் நிறுவனங்களுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல எனவும் அவ்வாறு வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும் எனவும் சபாநாயகர் இதன் போது தெரிவித்தார்.
மேற்படி விடயம் பாராளுமன்ற வரம்பிற்குள் வருகின்ற விடயமாகும். எமது முன்னோர்கள் இத்தகைய நிலைப்பாட் டினையே கொண்டிருந்தனர். முன் னாள் சபாநாயகர் அநுர பண்டார நாயக்கவின் தீர்ப்பு இதில் முக்கியமானது. பாராளுமன்ற அதிகாரத்துக்குட்பட்ட விடயங்களில் தலையிடுவது பாராளுமன்ற அதிகாரத்துக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும்.
சபாநாயகருக்கோ அல்லது தெரிவுக்குழு உறுப்பினருக்கோ அனுப்பிவைக்கப் பட்டிருக்கும் அழைப்பாணை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று மாலை சபையில் அறிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறப்புரிமை மீறல் பிரச்சினை
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவை செய லிழக்கச் செய்யும் அதிகாரம் நீதிமன் றத்திற்கோ அல்லது வேறு எந்த சட்டங் களுக்கோ இடமில்லை என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேற்படி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ள்ள மனுக்களின் ஊடாக தெரிவுக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள தாக கூறிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான பணிகளுக்குப் பின் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா சிறப்புரிமை பிரச்சினையொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.
அந்த உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
பாராளுமன்ற உறுப்பினர்கள் 117 பேர் கைச்சாத்திட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 107 (2) பிரிவின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை அகற்றுவதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு பாராளுமன்றத்தின் பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி சமர்ப்பிக்கும் பொருட்டான முன்மொழிவொன்று பாராளும ன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது 2012 நவம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உங்களது கட்டளையின் பிரகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக இப்பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் கீழ் நீங்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் இப்பாராளுமன்றத்தின் 11 அங்கத்தவர் களை உள்ளடக்கிய விசேட தெரிவுக் குழுவொன்றை 2012 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நியமித்துள்ளமை பற்றி உங்கள் பணிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
மேற்குறிப்பிட்ட விசேட தெரிவுக்குழுவானது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை என்பவற்றி னூடாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான அதிகாரத்தின் கீழ் ஒன்றுகூடி இதில் குறிப்பிடப்பட்டு ள்ள விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதுடன், இத் தெரிவுக் குழுவானது மீண்டும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி கூடவுள்ளது.
அவ்வாறிருக்கையில் பல்வேறு தரப்பினர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடுகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றினை எடுக்கும் பொருட்டு அதனை உச்ச நீதிமன்றத்திடம் முன்னளித்துள்ளதுடன் அதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மேன்முறையீட்டில் பிரதிவாதியாக உங்களது பெயரும், விசேட தெரிவுக் குழு அங்கத்தவர்களது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி பிரதிவாதிக்கான அறிவுறுத்தல் கடிதம் எனக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் மேற்படி தெரிவுக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் இக் கடிதம் கிடைக்கப்பட்டுள்ளமை பற்றி உங்களுக்கு அறியத்தர விரும்புகிறேன்.
மேலும் இப்பாராளுமன்றத்தின் சபாநாயகரான நீங்களும் மேற்படி பிரதிவாதிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்Zர்கள். அதனடிப் படையில் மேற்படி மனுக்கள் தொடர்பாக நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. இவ்விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும் நீங்கள் இத் தெரிவுக் குழுவின் அதிகாரத்தை பலமற்றதாக செயற்பட வேண்டுமென்பதாகும். உங்களின் வசதிக்காக aட் கட்டளை இலக்கம் 360/2012 உச்ச நீதிமன்ற முன்னளித்தல் இலக்கம் 7/2012 கட்டளை என்னிடம் நேற்று கிடைக்கப்பெற்ற நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள மனுவின் பிரதியொன்றை இத்துடன் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.
சபாநாயகர் அவர்களே, பிரதம நீதியரசர் பதவியிலிருந்து அகற்றுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் நீங்கள் நியமித்துள்ள விசேட செயற்குழு வானது இப்பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றினை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிய பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான உங்களது செயற்பாட்டினை எந்தவகையிலும் பாராளுமன்றத்துக்கு புறம்பான வகையில் சவாலாகக் கொள்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரமோ அல்லது நிலையியற் கட்டளையின் பிரகாரமோ அல்லது நாட்டின் வேறெந்தவொரு சட்டத்தின் பிரகாரமோ இடமில்லை என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் நீங்கள் நியமித்துள்ள விசேட செயற்குழுவானது பாராளுமன்ற கட்டளைகளின் பிரகாரம் நீங்கள் விதிக்கின்ற விதிமுறைக்கேற்பவே செயற்படுதல் வேண்டும். அச் செயற்குழுவானது உங்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் மாத்திரமே செயற்படமுடியும். எந்தவொரு வெளித் தரப்பினரோ அல்லது நிறுவனமோ அல்லது நீதிமன்றம் ஒன்றிற்கோ அச் செயற்குழு செயற்பட வேண்டிய விதம்பற்றி சிபார்சுகள் அல்லது கட்டளைகள் இடுவதற்கு எந்தவகையான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் கிடையாது. பாராளுமன்றத்தின் இறைமையை பாதுகாக்கும் பிரதான நபராக உங்களுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கும் பாராளுமன்றத்தின் அடையாளம் தனித்துவம் மற்றும் இறைமை, கெளரவம் என்பவற்றைப் பாதுகாப்பதற்கான உரிமை உள்ளது. வெளிநபர்களின் மூலம் பாராளுமன்றத்தின் இறைமைக்கோ கெளரவத்திற்கோ ஏதேனும் பங்கம் ஏற்படும் வகையில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாராளுமன்றத்தின் இறைமை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளதென்பதை பொறுப்பு டன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறான நீதிமன்ற கட்டளைகள் மூலம் வழங்கப்படுகின்ற தீர்மானங்களிலிருந்து உங்களையோ அல்லது பாராளுமன்றத்தையோ அல்லது அதன் தெரிவுக் குழுக்களையோ கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவானதாகும். இது தொடர்பாக இதற்கு முன்னர் ஷிவிபிஞி 297/2001. ஷிவிபிஞி 298/2001 ஆகிய நீதிமன்ற கட்டளைகள் மூலம் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்பாக பாராளுமன்ற கன்சார்ட் அறிக்கையில் 2001 ஜூன் மாதம் 20 ஆம் திகதி 1031 முதல் 1048 வரையிலான பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை பற்றி முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க அவர்களினால் வழங்கப்பட்டுள்ள கட்டளை தொடர்பாக உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
‘அதில் உச்ச நீதிமன்றம் அவ்வாறான ஒரு தடையுத்தரவை வழங்குவதற்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை எனவும், அவ்வாறானதொரு தடையுத்தரவு ஒன்றின் மூலம் ஒன்றிற்கு சபாநாயகர் கட்டுப்பட் டில்லை எனவும் இவ்வாறான ஒரு உத்தரவை நடைமுறைப்படுத்த எதுவித சட்ட ரீதியான கடப்பாடும் கிடையாதெனவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.’
எனவே பாராளுமன்றத்தின் இறைமை ஒருமைப்பாடு தனித்துவம் மற்றும் கெளரவத்தை பாதுகாப்பதற்கு கட்டுப்பட்டுள்ள நீங்கள் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் இவ்வாறான சவால்கள் தொடர்பாக சபாநாயகராகிய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக சரியான தீர்ப்பொன்றை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ad

ad