புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


நீர்ப்பறவை பாடல் வரிகள் மாற்றம்: கவிஞர் வைரமுத்து அறிக்கை

இதையடுத்து பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுக்கோளுக்கு இணங்க ‘நீர்ப் பறவை’ பாடல்களில் அவர்கள் குறிப்பிட்ட சில வரிகளை மாற்றி அமைத்திருக்கிறேன்.
சீனுராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படம் நாளை ரிலீசாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி உள்ளார். பாடலில் உள்ள சில வரிகள் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பியது. கிறிஸ்தவ அமைப்புகள் பேராட்டத்திலும் ஈடுபட்டன.
படத் தின் பாடல் காட்சிகளில் மாற்றப்பட்ட வரிகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. கலை என்பது சமூகத்தை மேம்படுத்துவதாகவும் பண்பாட்டை செழுமை செய்வதாகவும் இருக்க வேண்டுமென்பது எனது கவிதைக் கொள்கை. எனவே எவர் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமாக இருக்காது என்று குறிப்பிட்டு உள்ளார்.
கவிஞர் வைரமுத்து முதலில் எழுதிய ‘என் உயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய்’ என்ற வரிகளுக்கு மாற்று வரிகளாக ‘என்னுலகம் கைவசம் இல்லை. என் பெயரும் ஞாபகம் இல்லை. சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்’ என்று எழுதப்பட்டு உள்ளது.
கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்தவப் பெண்ணே பச்சை முத்தம் தர மனமில்லையா, ஒரு கன்னம் தர மறுகன்னம் காட்டு திருமறை வரி நினைவில்லையா என்ற வரிகளுக்கு மாற்றாக ‘கிச்சு கிச்சுப்பண்ணும் கிளி வண்ணப் பெண்ணே பச்சை முத்தம் தர மனமில்லையா இரு இருதயம் நெருங்கிய பின்னே இதழுக்கு என்ன இடைவெளியா’ என்றும் கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித்தாயடி என்ற வரிக்கு பதிலாக காதல் தாயே நீயடி என்றும் மாற்றி எழுதப்பட்டு உள்ளன

ad

ad