புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


காவிரி நதி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரண

காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, கர்நாடகா முதலமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை ப யனளிக்காதது குறித்து தமிழக அரசு
முறையிட உள்ளது.
இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி நீதிபதிகள், டி.கே ஜெயின், மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நதி நீர் தொடர்பாக இரு மாநில ,விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், இப்பிரச்னைக்கு தமிழக, கர்நாடக மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், தமிழக - கர்நாடக முதலமைச்சர்கள் சந்திப்பு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்றைய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad