புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
கடைசி நாளான வியாழக்கிழமை தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய இலங்கை அணி கடைசி வேளையில் (செஷன்) 195 ரன்களில் சுருண்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 153 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ராஸ் டெய்லர் 142, கேன் வில்லியம்சன் 135, ஃபிளின் 53 ரன்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ûஸ விளையாடிய இலங்கை 94 ஓவர்களில் 244 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சமரவீரா 76, மேத்யூஸ் 47, பரணவிதனா 40 ரன்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி 5 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 2ஆவது இன்னிங்ûஸ விளையாடிய நியூஸிலாந்து 54 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ராஸ் டெய்லர் 74 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் ஹெராத் 3 விக்கெட்டுகளையும், குலசேகரா, ரணதேவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 363 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. சமரவீரா, மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
போராடிய இலங்கை: கடைசி நாளான வியாழக்கிழமை காலையிலேயே சமரவீராவின் விக்கெட்டை இழந்தது இலங்கை. இதையடுத்து மேத்யூஸýடன் இணைந்தார் பிரசன்ன ஜெயவர்த்தனா. இந்த ஜோடி நேரத்தைக் கடத்துவதிலேயே குறியாக செயல்பட்டது. இதனால் மதிய உணவு இடைவேளையின்போது 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது இந்த ஜோடியைப் பிரிக்க நியூஸிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடினர். அவர்களின் முயற்சிக்கு 61ஆவது ஓவரில் பலன் கிடைத்தது. 108 பந்துகளைச் சந்தித்த பிரசன்ன ஜெயவர்த்தனா 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த ரணதேவ், ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்பிறகு குலசேகரா களம்புகுந்தார். மறுமுனையில் மிகவும் பொறுமையாக ஆடிய மேத்யூஸ் 178 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்த ஜோடியும் நியூஸிலாந்து பெüலர்களை சோதித்தது. எனினும் அந்த அணி 168 ரன்களை எட்டியபோது குலசேகரா ஆட்டமிழந்தார். 40 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த எரங்கா டக்அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக மேத்யூஸ் ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்ஸ் 195 ரன்களில் முடிவுக்கு வந்தது. சுமார் 5 மணி நேரம் களத்தில் போராடிய மேத்யூஸ் 228 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ் தனி நபராகப் போராடியபோதும், மற்ற வீரர்கள் விரைவாக வெளியேறியதால், அவரின் போராட்டம் வீணானது.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி, போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாகவும், டிம் செüதி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இப் போட்டியில் நியூஸிலாந்து வென்றதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக முதல் போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad