புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

ஓடும் ரெயிலில் 13 கிலோ நகை கொள்ளை: மும்பை கொள்ளையர்கள் கைவரிசை- பரபரப்பு தகவல்கள்
கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஈரோடு அருகே ரெயில் வந்தபோது நகை வைத்திருந்த சூட்கேசுகளின் பாதுகாப்பு சங்கிலியை துண்டித்து
எடுத்து சென்றனர்.
 
இதுதொடர்பாக சென்னை நகைக்கடை ஊழியர்கள் ஜிஜேந்தர்சிங், மதன்சிங் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த கொள்ளை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
 
சென்னை ரெயில்வே ஐ.ஜி. ஆறுமுகம் உள்பட உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. நகை கொண்டு செல்லப்பட்ட ரெயிலில் பயணம் செய்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
 
பின்னர் தூத்துக்குடி போன்ற பல்வேறு இடங்களில் ஓடும் ரெயிலில் நகை கொள்ளையடித்த கேரளா கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வாரம் தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் மும்பை கொள்ளை கும்பலுக்கு 13 கிலோ நகை கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மும்பை விரைந்தனர்.
 
இந்த கொள்ளை கும்பல் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் அதிகம் அமைந்திருக்கும் இடங்களில் 15 நாட்கள் வரை கொள்ளையர்கள் தங்கி நோட்டமிடுவார்கள். பின்னர் யார்-யார்? கிலோ கணக்கில் நகை மாடலுக்கு கொண்டு வருகிறார்கள். எங்கு தங்கி இருக்கிறார்கள்? என்பதை நோட்டமிட்டு பின்தொடர்வர்கள்.
 
அதன்பின்னர் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை கிடைக்கும்போது கொள்ளையடிப்பார்களாம். இந்த கொள்ளை கும்பலை பிடித்தால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ad

ad