புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

விக்கிலீக்' இணையதளம் அதிபராக ஜூலியன் அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்
அமெரிக்காவின் தூதகரம் இடையேயான ரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும்
செக்ஸ் வழக்கு தொடரப்பட்டது.

இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாங்கே இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். ஆனால் அவரை சுவீடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதால், நாடு கடத்த இங்கிலாந்து போலீசார் தேடினர். இதிலிருந்து தப்பிக்க அசாங்கே லண்டனிலுள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்தில் கடந்த ஜூன் மாதம் தஞ்சம் அடைந்தார். 

அது முதல் அவர் அங்கேயே தங்கி இருக்கிறார். பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈகுவேடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது அசாங்கே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுபற்றி இங்கிலாந்து நாட்டிற்கான ஈகுவேடார் தூதர் அனா ஆல்பின் என்பவர் குயிட்டாவில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

அசாங்கே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இது எந்த நேரத்திலும் மேலும் மோசமான நிலையை அடையலாம். முழு மருத்துவ செலவுகளையும் ஈகுவேடார் அரசாங்கமே ஏற்றுள்ளது. டாக்டர்கள் தினமும் சென்று அவருடைய உடல்நிலையை சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில மாதத்திற்கு முன்பு அசாங்கே வெளியிட்ட ஒரு தகவலில், இன்னும் 6 மாதம் முதல் ஓராண்டிற்குள் தான் தூதரகத்தில் இருந்து சுதந்திரம் அடைய உடன்பாடு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 

ad

ad