ஞாயிறு, டிசம்பர் 16, 2012


England 330 & 161/3 (79.0 ov)
India 326/9d
England lead by 165 runs with 7 wickets remaining

 கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர்.

இந்திய இராணுவத் தளபதி புதன் இலங்கை வருகிறார்

 இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை இலங்கை வருகின்றார்.

ஈழ மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வி. சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 15-12-2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது. 


குழந்தைகளை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற இளைஞன் யார்? - பரபரப்புத் தகவல்கள்
 உலகையே உலுக்கியிருக்கிறது அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் நடந்துள்ள பள்ளிக் குழந்தைகள் மீதான துப்பாக்கிச் சூடு. 
 28 பேரை பலி வாங்கியிருக்கும் இந்தப் பயங்கரச் செயலைச் செய்தவன் ஆடம் லான்சா என்ற இருபது வயது இளைஞன். 
 

1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை புலிகளுக்கு வாங்கினார்: வழக்கின் தீர்ப்பு !

மூன்று இளைஞர்கள் கனடாவின் பயங்கரவாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்க்ள். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரதீபன் நடராஜாவும் ,சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவும்

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு


வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கியிருந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 2 உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதிகளும் நாளை நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவர்கள் இருவருடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


நீதித்துறை எழுச்சியினால் பின்வாங்கினார் ஜனாதிபதி; விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு
குற்றப் பிரேரணைக்கு எதிராக நீதித்துறை கிளர்ந்தெழுந்ததைக் கண்டு அவ்விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்க ஆரம்பித்துள்ளார் என்றும், குற்றப் பிரேரணையை திரும்பப் பெற வைப்பதற்கான சக்தி, சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது என்றும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் என்பது கட்சி அல்ல: வன்முறை கும்பல் - டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பா.ம.க. சார்பில், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது குறித்தும், காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்கு மாம்பலத்தில்

 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 87 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது.
இலங்கையில்மாத்தளை  நகரில் கொன்று புதைக்கப்பட்ட 60 பேரின் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இங்குள்ள ஒரு மருத்துவ வளாகத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றபோது, இந்த 60 பேரின் எலும்புகள் கிடைத்ததாக பி.பி.சி. தெரிவிக்கிறது.

1980-ம் ஆண்டு இப்பகுதியில் அரசுக்கு எதிராக எழுந்த சிங்கள இடது சாரி கொரில்லா கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அல்லது
உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. 

அப்பி மே நோனவ மெத்தன தியாகென மடவனவா (நாங்கள் இந்தப் பெண்ணை இங்கு வைத்து மேய்ப்போம்), பபா  நேஹே பபா உக்குங் (குழந்தை இல்லை பால்குடிக் குழந்தை), 
பைத்தியக்காரப் பெண்மணி, நீதிமன்றில் நாடகமாடுபவள் என்றெல்லாம் தன்னை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் விசாரணையின் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க சபா நாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். 
 
பிரதம நீதியரசரின் சட்ட விவகாரங்களைக் கையாளும் சட்ட நிறுவனம் மூலமே இந்தக் கடிதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ள

நீதித்துறை எழுச்சியினால் பின்வாங்கினார் ஜனாதிபதி; விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு
குற்றப் பிரேரணைக்கு எதிராக நீதித்துறை கிளர்ந்தெழுந்ததைக் கண்டு அவ்விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்க ஆரம்பித்துள்ளார் என்றும், குற்றப் பிரேரணையை திரும்பப் பெற வைப்பதற்கான சக்தி, சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது என்றும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட கிரகம் பூமியை அண்மித்தது; ஆபத்து ஏதும் இல்லை
5 கிலோ மீற்றர் அகலம் கொண்ட பெரிய கிரகம் ஒன்று 12 ஆம் திகதி பூமிக்குச் சமீபமாக பயணித்துள்ளது. அதன் மூலம் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு லட்சம் தமிழர்களை போரின் பின் காணோம்; பி.பி.ஸியின் முன்னாள் செய்தியாளர் விவரிப்பு
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் பின்னர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் பி.பி.ஸியின் முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிஸன். 

மாணவரை உடன் விடுவிக்க பாதுகாப்புச் செயலாளர் மறுப்பு; கவுன்ஸிலிங் கொடுக்க வேண்டும் என்கிறார்ம் "சில நாள்கள் வைத்து உளவளத்துணை (கவுன்ஸிலிங்) கொடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள்'' என்று பல்கலைக்கழக குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று முகாமைத்துவ மற்றும் வணிக பீடாதிபதி க.வேல்நம்பி நேற்றிரவு "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களைவிடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.